திருநெல்வேலி பாலத்தில் அரசு பஸ் டூவீலர் மோதல்: பலி 3

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் டூவீலரில் பயணித்த மூன்று வாலி பர்கள் சம்பவயிடத்திலேயே பலியாயினர்.

திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி நோக்கி பயணி களுடன் சென்ற அரசு பஸ்சை ஆலங்குளத்தைச் சேர்ந்த ராஜா ஓட்டினார்.

நேற்று அதிகாலை 1:30 மணியளவில் ஜங்ஷன் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தில் பஸ் சென்ற போது, எதிரே திருநெல்வேலி டவுனில் இருந்து மூன்று வாலிபர்கள் அதிவேகமாக ஒரு டூவீலரில் எதிரே சென்றனர்.

பாலத்தின் மீது சென்ற பஸ் மீது டூவீலர் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். போலீசார் அவர்களது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

போலீஸ் விசாரணையில் இறந்தது திருநெல்வேலி டவுன் வையாபுரி நகர் லோகேஷ் 23, முகமது அலி தெரு சந்தோஷ் 22, சாதிக் 22, என தெரிய வந்தது. பானி பூரி கடைக்காக சென்ற போது விபத்தில் சிக்கி னர். மூவரும் நண்பர்கள்.

லோகேஷ் பெட்ரோல் பங்க் ஊழியர். சந்தோஷ் கோவை மிக்சி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சாதிக் தனியார் உணவக ஊழியர்.

இவர் நேற்று முன்தினம் திருநெல்வேலி பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement