திமுக ஆட்சியில் தலை விரித்தாடும் ஊழல்: ஆடிட்டர் குருமூர்த்தி குற்றச்சாட்டு

கோவை: '' தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது,'' என ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
கோவையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கில், 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாவது:திராவிடத்துக்கு எந்தவொரு மொழியும் கிடையாது. தி.மு.க.,வினர் திராவிடம், தமிழ் குறித்து பேசுகின்றனர். இவ்விரண்டுக்குமே தி.மு.க.,வினர் உண்மையாக இல்லை. தி.மு.க., தமிழை அழிக்க நினைக்கிறது; இதுவரை தமிழுக்காக எதுவும் செய்யவில்லை.
தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்., ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியாவில் இருந்த தேசியத்தை மீட்டெடுத்தது பா.ஜ., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் அதை செய்யவில்லை. தி.மு.க.,வுக்கு தேசியத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் ஆகிய மூன்றையும் முன்னெடுப்பதே பா.ஜ.,வின் உண்மையான நோக்கம்.
இவ்வாறு, அவர் கூறினார்.









