வீடு புகுந்து நகை திருடிய நான்கு பேர் கைது
துரைப்பாக்கம்: வீடு புகுந்து, நகை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நான்கு சவரன், மூன்று ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெருங்குடி, சேரன் தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி, 38; தனியார் நிறுவன துாய்மை பணியாளர். கடந்த பிப்ரவரி மாதம் இவரது வீட்டில் இருந்து, 3 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு திருடுபோனது.
விசாரணையில், பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அஸ்வின், 19, அய்யனார், 20, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு சவரன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவம் அதேபோல, பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் தேவநாதன், 32; பெயின்டர். கடந்த மாதம் 8ம் தேதி, இவரது வீட்டு ஜன்னலை பெயர்த்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்து 5 சவரன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில், பெருங்குடியைச் சேர்ந்த பிரகாஷ், 19, மணிகண்டன், 35, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, மூன்று சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மல்லிகைப் பூச்சரத்தால் வந்த வினை; பிரபல மலையாள நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்
-
ஈமத்தாழியும்... இரும்பு பொருட்களும்... - அகழாய்வு
-
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்; வைகோ அறிவிப்பு
-
210 தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் பேட்டி
-
மணிமொழி