வில்வித்தை: இந்தியாவுக்கு தங்கம்

குவாங்ஜு: தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஆண்கள் அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. மூன்று செட்களின் முடிவில் போட்டி 176-176 என சமநிலையில் இருந்தது. நான்காவது செட்டில் இந்தியா 59 புள்ளி பெற்றது. பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளி கிடைத்தது.
முடிவில், ரிஷாப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந்திய அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில், முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.
கலப்பு அணிகளுக்கான 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய ரிஷாப் யாதவ், ஜோதி சுரேகா அடங்கிய இந்திய அணி 155-157 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பெண் உட்பட மூவர் பலி: 71 பேர் 'அட்மிட்'
-
மூடப்பட்ட அரசு பள்ளி போராட்டத்தால் திறப்பு
-
செங்கல் லோடு லாரி விபத்து: டிரைவர் பலி; 4 பேர் காயம்
-
போக்சோவில் கைதான ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'
-
நாட்டு குண்டை வெடிக்க செய்து 'ரீல்ஸ்' வெளியிட்டவருக்கு 'கம்பி'
-
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவரிடம் விசாரணை
Advertisement
Advertisement