மூடப்பட்ட அரசு பள்ளி போராட்டத்தால் திறப்பு
பந்தலுார்; பந்தலுார் அருகே பென்னை பகுதியில் மூடப்பட்ட பழங்குடியினர் பள்ளி, மக்களின் போராட்டத்தால் மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, 'ஜீரோ'வாக உள்ளதாக கூறி, 25 அரசு பள்ளிகளை மாநில கல்வித்துறை மூடியது. அதில், பந்தலுார் அருகே பென்னை பகுதியில், 32 மாணவருடன் செயல்பட்டு வந்த அரசு ஆரம்பப்பள்ளியும் ஒன்று.
இதனால், பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், ஆக., 23ல் செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, 30ம் தேதி, அனைத்து கட்சியினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக, அரசின் உத்தரவின் கீழ், நேற்று காலை பென்னை ஆரம்ப பள்ளி மீண்டும் திறந்து செயல்பட துவங்கியது.
நீலகிரி பண்டைய பழங்குடியினர் சங்கம், மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவில், 'நீலகிரியில் மூடப்பட்ட மற்ற, 24 பள்ளிகளையும் திறந்து, பழங்குடியினர் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திருச்சி கிழக்கில் விஜய் போட்டியா?
-
த.வெ.க.,வை பார்த்து ஆளுங்கட்சி நடுங்குகிறது: விஜய் காட்டம்
-
கருப்பு கொடி காட்டியது யார்? விசாரிக்க பழனிசாமி உத்தரவு
-
கட்சி நிர்வாகிகளை நீக்கி பழனிசாமி நடவடிக்கை
-
அரசிடம் இருந்து தகவல் கேட்பதே குற்றமா? வேலுார் இப்ராஹிம் கைதுக்கு பா.ஜ., கொதிப்பு
-
'கட்சியினருக்கு வணக்கம் மட்டும்தான்' தி.மு.க., நிர்வாகியின் குமுறலால் பரபரப்பு