பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் போரில் ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை தொடங்கிய பின்னர், அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளார்.
இது குறித்து ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புடின் உலகை சோதிக்கிறார்.
ரஷ்யா மற்றும் ரஷ்யா உடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், கடுமையான வரிகள் விதிக்க வேண்டும்.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புடின் பேச்சு வார்த்தைகளை விரும்பவில்லை. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தசூழலில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












மேலும்
-
துணை ஜனாதிபதி தேர்தல்: சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் புறக்கணிப்பு
-
ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வைகோ அதை சொல்லியிருக்க கூடாது: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா பேட்டி
-
காஷ்மீரில் குல்ஹாம் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி
-
கோப்பை வென்றார் கார்லஸ் அல்காரஸ்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் அசத்தல்
-
நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்: 16 பேர் உயிரிழப்பு