வைகோ அதை சொல்லியிருக்க கூடாது: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா பேட்டி

4

காஞ்சிபுரம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்று மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறினார்.

கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையில் மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டதாக, அக்கட்சியில் பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் அளித்த பேட்டி:

"என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாகவும், அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகவும் உள்ளது,எந்த லட்சியத்திற்காக கழகத்தை தோற்றுவித்தாரோ அந்த லட்சியத்தை அடையவதில் உறுதியாக உள்ளோம்.

கொள்கைக்காக போராடுவோம். நாங்கள் கருத்தியல் ரீதியாக மாறவில்லை. வைகோ, அவரது மகன் வருகைக்கு பின் மாறிவிட்டார்," என்று கூறினார்.

Advertisement