பாதுகாப்பின்றி பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள்

மதுரை: மதுரை நகரில் பல மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள். இதுபோன்று 'ரிஸ்க்' ஆன பணியின்போது ஹெல்மெட், தவறி விழுந்தால் கீழே விழாமல் இருக்க உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறு, மின்கம்பிகளில் கை, கால்கள் படாமல் இருக்க பாதுகாப்பு உறை அணிய வேண்டும். ஆனால் தெப்பக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் நடக்கும் கட்டுமானங்களில் எந்த பாதுகாப்பு உபகரணங்களின்றி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுமான பணியின்போது பாதுகாப்பு குறைபாடுகளால் வடமாநில தொழிலாளி இறந்தார். சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, போலீஸ் மீது கல்வீசிய சம்பவம் நடந்தது. அதுபோன்று மதுரையிலும் நடக்காதவாறு அதிகாரிகள் கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

Advertisement