நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்

மதுரை: நாட்டுமாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாடுகள் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சினை ஊசி மூலமே கருத்தரிப்பு நடந்தால் நாட்டு மாடுகள் அழியும். எனவே அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு சங்கம் சார்பில் தலைவர் ராஜிவ்காந்தி, நிர்வாகி செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் புலிக்குளம் கிடைமாடு மேய்ச்சல் சங்கம், நாட்டுமாடு நலச்சங்கம் ஆகியவையும் கலந்து கொண்டன.
நாட்டு மாடு நலச்சங்க தலைவர் கலைவாணன், செயலாளர் ஆவி கூறுகையில், ''மாடுகள் இனப்பெருக்க தடைச்சட்டத்தால் நாட்டு மாடுகள் அழியும். நாட்டு மாடுகளை பாதுகாக்க நடக்கும் எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவு தருவோம்'' என்றனர்.
மேலும்
-
தமிழக அணி ஏமாற்றம்
-
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
-
திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி
-
ரஷ்யா தாக்குதல்: பென்சன் வாங்க காத்திருந்த உக்ரைன் நாட்டினர் 21 பேர் பலி
-
சியாச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
-
ஆபரேஷன் சிந்துாரில் 24 மணி நேரமும் உழைத்த 400 விஞ்ஞானிகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்