தம்பதியை கட்டி போட்டு தங்கம், வெள்ளி கொள்ளை
தாவணகெரே: தாவணகெரேயில் வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை கட்டிப் போட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி பொருட்களை ஆறு பேர் கும்பல், கொள்ளை அடித்துச் சென்றது.
தாவணகெரேயின் சன்னகிரியின் காகனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாதப்பா - சாவித்ரியம்மா தம்பதி. தங்கள் மகனுடன் வசித்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டில் இருந்து மகன் வெளியே சென்றிருந்தார்.
இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டுக்குள் நுழைந்து, சாவித்திரியம்மா, மாதப்பாவின் வாயில் துணியை வைத்து திணித்தனர். பின், இருவரின் கை, கால்களை கட்டிப் போட்டனர். வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், மகனின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
வெளியே சென்ற மகன், வீட்டுக்கு வந்தபோது, சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சாந்தேபென்னுார் போலீசில் புகார் அளித்தார். ஏ.எஸ்.பி., சாம் வர்கீஷ், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.
மேலும்
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
-
' அமெரிக்கா செய்ததையே செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா
-
அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு