கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்

புதுடில்லி: டில்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் TailPipe பகுதியில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து அந்த விமானம் கிளம்பாமல் புறப்பட்ட இடத்துக்கு திரும்பியது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று தலைநகர் டில்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட ஓடுபாதையில் தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தின் TailPipe ல் தீ ஏற்பட்டது. காக்பிட்டில் இருந்த விமானிகளுக்கு எந்த எச்சரிக்கையும், சிக்னலும் வரவில்லை. டில்லியில் தரையிறங்கிய மற்றொரு விமானத்தின் விமானி பார்த்து தகவல் கொடுத்தார். இதனையடுத்து அந்த விமானத்தை கிளப்பாமல், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு செல்ல விமானிகள் கொண்டு சென்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த விமானம் காலையில் கிளம்ப வேண்டி இருந்தது. ஆனால், 4 மணி நேரம் தாமதமாக கிளம்ப இருந்த நேரத்தில் பிரச்னை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், விமானிகள் விமானத்தில் ஏறிய நிலையில் ஏசி எதுவும் செயல்படவில்லை. இதனால் வியர்வையில் இருந்த பயணிகள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கினர். விமானம் தாமதம் குறித்து காரணம் எதுவும் கூறவில்லை எனவும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர்.
TailPipe Fire என்றால் என்ன
விமானத்தின் இன்ஜின் செயல்பட துவங்கும் போது அல்லது அணைக்கும் போது இந்த நிகழ்வுநடக்கும். Combustion Chamber அல்லது turbine areaவில் அதிக எரிபொருள் செல்வதே இதற்கு காரணம்.


மேலும்
-
செப்.14 முதல் மீண்டும் வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை தொடக்கம்!
-
கட்சி விரோத நடவடிக்கை: பிஜூ ஜனதா தள மாஜி அமைச்சர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
-
சக்கரம் இல்லாமல் மும்பையில் தரையிறங்கிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி
-
பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதி விபத்து: 20 பயணிகள் காயம்
-
விளம்பர மாடல் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: நடிகர் விஜய்
-
ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்