மாநில பூப்பந்தாட்ட போட்டி நாய்க்கன்பேட்டை அணி தகுதி

காஞ்சிபுரம்: மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க நாய்க்கன்பேட்டை அணி தகுதி பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பூப்பந்தாட்டம் கழகம் சார்பில், ஆண்களுக்கான சீனியர் பூப்பந்தாட்ட போட்டி நாய்க்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.

மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமைவகித்தார்.

செயலர் ஜனார்தனன், பொருளாளர் பாலாஜி, உதவி செயலர் ஞானமலர் போட்டியை துவக்கி வைத்தனர்.

இதில், ஆறு அணிகள் பங்கேற்றதில், நாய்க்கன்பேட்டை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இதன் மூலம், வரும் 13ல், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில் நடைபெறும் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க நாய்க்கன்பேட்டை அணி தகுதி பெற்றுள்ளது.

Advertisement