முதல்வர் கோப்பை போட்டியில் 290 மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையர் பங்கேற்பு

சென்னை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், சென்னை மாவட்ட அளவில் 80 வீராங்கனையர் உட்பட 290 பேர் உற்சாகமாக பங்கேற்று, விளையாடி வருகின்றனர்.

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையருக்கான போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கின.

இதில், தடகளம், வீல் சேர் டேபிள் டென்னிஸ், எறிபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில், மாவட்டத்திற்கு உட்பட்ட சிறப்பு பள்ளிகள், தனிநபர் என, 80 பெண்கள் உட்பட மொத்தம் 290 பேர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப் படுத்தினர்.

இதில், அறிவுசார் குறைபாடுள்ள பெண்கள் பிரிவில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் நித்யா; குண்டு எறிதலில் ஸ்ரீமதி; காதுகேளாதோரில் 100 மீ., சுதா, குண்டு எறிதலில் ஹரணி; உடல் ரீதியாக பாதிக்கப்பட்டோரில் 100 மீ., ஸ்ரீநிதி, குண்டு எறிதலில் சர்மிளா; பார்வையற்றோரில் 100 மீ., அஸ்வினி, குண்டு எறிதலில் அனுஸ்ரீ ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.

அதேபோல், ஆண்களில் அறிவுசார் குறைபாடு பிரிவில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் தினகர்; குண்டு

எறிதலில் வசீகரன்; காதுகேளாதோரில் 100 மீ., தினகரன், குண்டு எறிதலில் புகழ் வேந்தன்.

உடல் ரீதியாக பாதிக்கப்பட்டோரில் 100 மீ., சேக் அப்துல் காதர், குண்டு எறிதலில் மணிகண்டன்; பார்வையற்றோரில் 100 மீ., ரகுநாதன், குண்டு எறிதலில் திவான் முகமது ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர். தொடர்ந்து மற்ற போட்டிகள் நடக்கின்றன.

@block_B@

என்.எஸ்.என்., பள்ளி கால்பந்தில் சாதனை

முதல்வர் கோப்பைக்கான, செங்கல்பட்டு மாவட்ட கால்பந்து போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், நேற்று துவங்கியது. இதில், பள்ளி அளவிலான போட்டியில், மாணவரில் 86, மாணவியரில் 36 அணிகளும், கல்லுாரி பிரிவில், மாணவரில் 46, மாணவியரில் 16 அணிகளும் என, மொத்தம் 184 அணிகள் பங்கேற்றன. இதில், பள்ளி மாணவியருக்கான போட்டிகள் நேற் று நிறைவடைந்தன. அனைத்து போட்டிகள் முடிவில், சிட்லபாக்கம், என்.எஸ்.என்., நினைவு பள்ளி அணி முதலிடத்தையும், தாம்பரம், கிரிஸ்ட் கிங் மகளிர் பள்ளி இரண்டாம் இடத்தையும், நந்திவரம் அரசு பெண்கள் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி ன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.block_B

Advertisement