சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்; நன்றி சொன்னார் கிரண் ரிஜிஜூ!

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்தார்.
நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தல் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 452 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 ஓட்டுகளை பெற்றார்.
வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது; துணை ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு மிகவும் ரகசியத்தன்மையுடன் நடந்தது. மேலும், பல எதிர்க்கட்சி எம்பிக்களும் என்டிஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்துள்ளனர். அவர்கள் தங்கள் மனசாட்சியின் குரலைக் கேட்டு ஓட்டளித்திருப்பதைக் காட்டுகிறது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த அனைத்து என்டிஏ எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.









மேலும்
-
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு!
-
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை