நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி

சென்னை: திமுக அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது ஏன் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
“தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி” என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது. நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது ஆளும் அரசு.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத திமுக அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? திமுக ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
இவ்வாறு நயினாா் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்
-
ஏ.ஐ. உதவியுடன் இலக்கை தானாக கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை
-
பாட்மின்டன்: சிந்து 'ஷாக்'
-
இந்தியாவுக்கு ஆதரவு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி
-
போதையில் கார் ஓட்டிய திமுக சேர்மன்; முதியவர் உயிரிழப்பால் அதிர்ச்சி!
-
வங்கி மோசடி: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு
-
ரூ.2,532 கோடி வருமானம் ஈட்டிய மாநில கட்சிகள்: திமுக - ரூ.180 கோடி, அதிமுக - ரூ.46 கோடி வருவாய்