சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஹிந்து முன்னணி வாழ்த்து

திருப்பூர்; துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வானது தமிழகத்துக்கு பெருமை என்று, ஹிந்து முன்னணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: இந்தியாவின், 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலிலும், பொது வாழ்விலும் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டவர். சிறு வயது முதலே தேச பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். எம்.பி.யாகவும், மத்திய அரசு துறைகளில் தலைவராகவும், கவர்னராகவும் படிப்படியாக உயர்ந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றியவர். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பது குறித்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் தமிழகத்துக்கு கிடைத்த அங்கீகாரம். தமிழகத்தில் வாழ்ந்த ராஜாஜி முதல் டாக்டர் அப்துல்கலாம் வரை உயரிய பதவியில் இருந்து பாரதத்துக்கு பெருமை சேர்த்தவர்களின் வரிசையில், ராதாகிருஷ்ணனும் பெருமை சேர்ப்பார்.

நம் நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள அவருக்கு ஹிந்து முன்னணி சார்பில் பாராட்டு தெரிவித்து, அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement