ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை இடம் மாற்றம்
சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் இடம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் உள்ள பிரேத பரிசோதனை வளாகத்தில், குளிர்சாதன வசதி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யும் உடல்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதுகுறித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
'ஏசி' சீரமைப்பு காரணமாக, பிரேத பரிசோதனை இடம் தற்காலிமாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது. இங்கு தினசரி, ஐந்து உடல்கள் வரும். அந்த உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவ குழுவினர், அங்கு பிரேத பரிசோதனை செய்வர். வழக்கமான உடல்கள் பதிவு நடைமுறையில் மாற்றம் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
-
குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு
-
கடலில் கார் ஓட்டிய போதை ஆசாமிகள் : கயிறு கட்டி கரை சேர்த்தனர் மீனவர்கள்
-
பழனிசாமி, விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வியூகம்: தென் மாவட்ட அமைச்சர்களுடன் உதயநிதி ஆலோசனை
-
மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., அரசு: இபிஎஸ்
-
கோவில் அருகில் தர்கா ஆக்கிரமிப்பு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு