மாவட்ட வாலிபால் போட்டி 37 அணிகள் பலப்பரீட்சை

சென்னை, ஆடவருக்கான 'பி' டிவிஷன் மற்றும் பெண்களுக்கான மாவட்ட வாலிபால் போட்டிகளில், 37 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், கீதா தேவி ரதி நினைவு கோப்பைக்கான ஆண்கள் மாவட்ட 'பி' டிவிஷன் வாலிபால் மற்றும் பெண்களுக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், நேற்று காலை துவங்கின.
போட்டிகள், எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கின்றன. ஆண்களில் 25, பெண்களில் 12 என மொத்தம் 37 அணிகளில், 520 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
'நாக் அவுட்' மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக்கான முதல் போட்டியில், டி.பி., ஜெயின் அணி, 25 - 13, 25 - 18 என்ற புள்ளி கணக்கில் குருநானக் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில், எஸ்.டி.ஏ.டி., அணி, 25 - 13, 25 - 13 என்ற புள்ளி கணக்கில் கிரிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியையும், தமிழக போலீஸ் அணி, 25 - 16, 25 - 12 என்ற புள்ளி கணக்கில் நியூ கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
பெண்களுக்கான ஆட்டத்தில், சிவந்தி கிளப், 25 - 5, 25 - 8 என்ற புள்ளி கணக்கில் சென்னை பிரண்ட்ஸ் அணியையும், தெற்கு ரயில்வே அணி, 25 - 6, 25 - 4 என்ற புள்ளி கணக்கில், மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியையும் தோற்கடித்தன. போட்டிகள், வரும் 14ம் தேதி வரை தொடர்கின்றன.
மேலும்
-
போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்
-
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்