விவசாய நிலத்திற்குள் புகுந்த பஸ்; திண்டிவனத்தில் பயணிகள் தப்பினர்

திண்டிவனம்; திண்டிவனம் அருகே பயணிகளுடன் சென்ற அரசு பஸ், சாலையோரம் இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி அரசு பஸ்(டிஎன்21- என்1881) நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை முண்டியம்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிச்சென்றார். 60 பயணிகள் இருந்தனர். காலை 11:00 மணியளவில், திண்டிவனம்-வந்தவாசி சாலையில் உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர விவசாய நிலத்திற்குள் புகுந்து, மண்ணில் சிக்கி நின்றது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்தில் சிக்கிய பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement