சிக்கிம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: 3 பேர் மாயம்


கேங்டாக்: சிக்கிமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


மேற்கு சிக்கிம், யாங்தாங் தொகுதிக்குள்பட்ட ரிம்பி பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இடைவிடாத மழை இருந்தபோதிலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.


இடிபாடுகளில் சிக்கி, ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


மேலும் ஒரு பெண் பலத்த காயம் அடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிலச்சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement