இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்

நாக்பூர்: இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் தான் அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
நாக்பூரில் பிரம்மகுமாரிகள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது;
இந்த உலகில் இந்தியா வலுவாக வளர்ச்சி அடைந்தால் என்ன நேரிடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். அதனால் தான் வரிகளை விதிக்கிறார்கள். 7 கடல்களுக்கு அப்பால் இருக்கிறாய் (அமெரிக்காவை குறிப்பிடுகிறார்). ஆனால் உனக்கு பயம் இருக்கிறது.
நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதை செய்தவரை (பாகிஸ்தான்) அவர்கள் (அமெரிக்கா) ஈர்க்கிறார்கள். அவர்கள் தங்களுடனேயே இருந்தால் இந்தியா மீது அழுத்தம் வரும் என்று நினைக்கிறார்கள்.
மக்களும், நாடும் தங்கள் உண்மையான சுயத்தை புரிந்து கொள்ளாவிட்டால், தொடர்ந்து பிரச்னைகளை சந்திப்பார்கள். நான் என்ற அணுகுமுறையில் இருந்து நாம் என்று அணுகினால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு அமையும். இன்று உலகிற்கு தீர்வுகள் மிகவும் தேவை.
இந்தியா ஒரு சிறந்த நாடாக இருந்தாலும், இந்தியர்களும் சிறந்தவர்களாக இருக்க பாடுபட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.







மேலும்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்
-
இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் இளையராஜா: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு
-
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: உற்பத்தி பாதிப்பு