பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதி விபத்து: 20 பயணிகள் காயம்

பரமக்குடி;ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நின்ற அரசு டவுன் பஸ் மீது, ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயம் அடைந்தனர்.
பரமக்குடி அருகே மதுரை நான்கு வழி சாலையில் பார்த்திபனூரில் இருந்து, பரமக்குடி நோக்கி 27ம் எண் அரசு டவுன் பஸ் வந்தது. அப்போது திருவரங்கி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் கிளம்ப தயாரானது.
தொடர்ந்து பின்னால் மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி அரசு பஸ் வேகமாக வந்துள்ளது. அதன் டிரைவர் கவனக்குறைவாக டவுன் பஸ் பின்னால் மோதி, சென்டர் மீடியனில் நிலை தடுமாறி நின்றது.
இதனால் மதுரை, ராமநாதபுரம் பஸ் முன்பகுதியில் முற்றிலும் சேதமடைந்தது. இதில் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த 20 பயணிகள் ரத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பார்த்திபனூர் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு!
-
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை