நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி

காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி இன்று( செப்.,12) இரவு பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
@1brநமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.
இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், தலைமை செயலகம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லங்களை சூறையாடினார். நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்து தேர்தல் நடக்கும்வரை அரசை வழிநடத்த இடைக்கால பிரதமரை தேர்வு செய்யும் பணி நடந்தது. காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோரை போராட்டக் குழுவினர் பரிந்துரைத்தனர்.
இதில், பாலென் ஷா தனக்கு விருப்பம் இல்லை என அறிவித்து விட்டார். சுசீலா கார்கி, மற்றும் குல்மான் கிஷிங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வதில் மாணவர்கள் அமைப்பினர் இடையே குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் அதிபர், ராணுவம், மாணவர் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவு அவர் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கும் வரை, அவர் இந்தப்பதவியில் இருப்பார்.
வாசகர் கருத்து (10)
K.Ravi Chandran, Pudukkottai - ,
13 செப்,2025 - 09:46 Report Abuse

0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
13 செப்,2025 - 07:46 Report Abuse

0
0
Reply
Moorthy - ,இந்தியா
13 செப்,2025 - 07:01 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
12 செப்,2025 - 21:51 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
12 செப்,2025 - 21:06 Report Abuse
0
0
Reply
JaiRam - New York,இந்தியா
12 செப்,2025 - 20:46 Report Abuse

0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
12 செப்,2025 - 20:11 Report Abuse

0
0
Reply
Tamilan - ,இந்தியா
12 செப்,2025 - 19:51 Report Abuse

0
0
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
12 செப்,2025 - 20:16Report Abuse

0
0
திகழும் ஓவியம், Ajax Ontario - ,
13 செப்,2025 - 07:12Report Abuse

0
0
Reply
மேலும்
-
துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்
-
உளறிக் கொட்டிய துணை முதல்வர்: கொந்தளித்தார் மோடி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
-
இளையராஜாவுக்கு பாரத ரத்னா: பாராட்டு விழாவில் முதல்வர் கோரிக்கை
-
பல மாவட்டங்களில் செப்.16 முதல் கனமழை பெய்யும்... வங்கக்கடலில் காற்றழுத்த சுழற்சி
-
லோக் அதாலத்: 90,000 வழக்குகளுக்கு தீர்வு
Advertisement
Advertisement