லோக் அதாலத்: 90,000 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை:நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில், நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஆண்டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி, தேசிய அளவில் நேற்று லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில், மூன்று அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டன.
மாவட்டம், தாலுகா அளவில், நீதிபதிகள் தலைமையில், தமிழகம் முழுதும் 501 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இந்த அமர்வுகள், 90,892 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளன.
இதன் வாயிலாக, 718 கோடியே, 74 லட்சத்து, 11,339 ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Kanns - bangalore,இந்தியா
14 செப்,2025 - 07:02 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
-
பெரம்பலூரில் பேச முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார் விஜய்!
-
தென்னிந்தியாவின் மாபெரும் மேடை - இரண்டாம்நாள்
-
த.மா.கா., பேச்சாளர் முகாம்
-
ஆன்மீகத்தில் வளர்வது ஆசியகண்டத்தில் மட்டுமே சாத்தியமா?
-
அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி
Advertisement
Advertisement