புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு அணி, ஜெய்ப்பூரை வென்றது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், மும்பை, டில்லி, பாட்னா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஜெய்ப்பூர் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த பெங்களூரு அணி, முதல் பாதி முடிவில் 16-9 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட ஜெய்ப்பூர் அணிக்கு 14 புள்ளி கிடைத்தது. ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 28-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணிக்கு அலிரேசா (8 புள்ளி), தீபக் சங்கர் (5) கைகொடுத்தனர். ஜெய்ப்பூர் சார்பில் நிதின் குமார் 8 புள்ளி பெற்றார். பெங்களூரு அணி, 6 போட்டியில், 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. மூன்றாவது தோல்வியை பெற்ற ஜெய்ப்பூர் அணி, 4 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தமிழ் தலைவாஸ் வெற்றி: மற்றொரு லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்கால் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 46-36 என்ற புள்ளி கணக்கில் 2வது வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் (16 புள்ளி) கைகொடுத்தார். பெங்கால் சார்பில் கேப்டன் தேவாங்க் 12 புள்ளி பெற்றுத்தந்தார்.
மேலும்
-
அரைசதம் விளாசினார் ஜெகதீசன் * 532 ரன் குவித்த ஆஸி.,
-
ரூ.20 கோடி போதைப் பொருள் சென்னையில் பறிமுதல்!
-
பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளை கைது செய்யாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
புயலுக்குப் பிறகு அமுத மழை பொழிவது போல நல்ல தீர்வு வரும்: நயினார் நாகேந்திரன்
-
பெண் கொலை: பாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட ராஜஸ்தான் போலீஸ்
-
தூத்துக்குடி கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 3 பேர் மூச்சுத்திணறி பலி