பெண் கொலை: பாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட ராஜஸ்தான் போலீஸ்

ஜெய்ப்பூர்: கருத்தரிக்காததை காரணம் காட்டி, திருமணமான பெண் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ரவுனிஜா கிராமத்தில் வசித்து வந்த வசிக்கும் சர்லாவுக்கு, கடந்த 2005 ஆம் ஆண்டு, டீக் மாவட்டத்தில் கோஹ் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட காக்ரா கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணம் நடந்தது. இங்கு வசித்து வந்த சர்லாவுக்கு குழந்தைகள் இல்லை.
குழந்தையை பெற்றெடுக்க முடியதாததை காரணம் காட்டி, கணவர் அசோக் மற்றும் மாமியார் சர்லாவை துன்புறுத்தினர். இந்நிலையில் சர்லா சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.
அதை தொடர்ந்து, கணவர் மற்றும் மாமியார் கொலையை மறைத்து, தற்கொலையாக காட்டுவதற்காக சர்லாவின் உடலை நெருப்பில் எரித்துவிட்டு, வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது. அதில் சர்லா உயிரிழந்ததாக கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதை நம்பாத கிராம மக்கள், சந்தேகமடைந்து, தகனம் செய்வதற்கு முன்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும், போலீசார் போனில் பெண்ணின் மாமியார் உறவினர்களைத் தொடர்பு கொண்டு, இறுதிச் சடங்குகளைத் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இந்நிலையில் மாமியார் குடும்பத்தினர் அவசரமாக உடலை எடுத்து தகனத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இருப்பினும், தகனம் செய்வதற்கு முன்பு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பாதி எரிந்த உடலைக் கைப்பற்றி, டீக் மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சர்லாவின் குடும்பத்தினர், டீக் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த அவரது சகோதரர் விக்ராந்த், தங்கையின் கணவர் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினர் சர்லாவை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினார். திருமணத்திற்குப் பிறகு, சர்லா கர்ப்பமாக இல்லாததால் அசோக் அடிக்கடி துன்புறுத்தி அடித்தார். அவர்களது குடும்பத்தினர் பல முறை கிராமத்திற்குச் சென்று தலையிட்டதாகவும், ஆனால் அசோக் சில நாட்கள் மட்டுமே நல்லவராக இருந்த நிலையில், துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்தார். அசோக் தனது சகோதரியை வீட்டிலேயே எரித்துவிட்டு தகனச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர். இது எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததும், நாங்கள் காக்ராவுக்கு விரைந்தோம், ஆனால் காவல்துறையினர் ஏற்கனவே என் சகோதரியின் உடலை டீக் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர் என்றார்.
இது குறித்து கோஹ் போலீஸ் அதிகாரி மகேந்திர சர்மா கூறியதாவது:
காக்ரா கிராமத்தில் சர்லா என்ற திருமணமான பெண் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தினோம்,உடலை வீட்டிற்குள் எரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை கண்டறிந்தோம்.
சர்லாவுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர். காக்ரா கிராமத்தில் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நோக்கத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு மகேந்திர சர்மா கூறினார்.
மேலும்
-
சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் 'டெட்' தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்
-
சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் கைவிட முடிவு
-
கூட்டுறவு வங்கியில் நகை கடன் வாங்குவோர் அதிகரிப்பு பின்னணி
-
சாராய வியாபாரிகளுடன் தொடர்பு 28 போலீசார் கூண்டோடு மாற்றம்
-
ரூ.18 கோடி போதை பொருள் பறிமுதல்
-
செய்திகள் சில வரிகளில்