சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு

போத்தனுார்; கோவை, வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. பத்திர பதிவில் முறைகேடு, லஞ்சம் வாங்குவது உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சார் பதிவாளர் ரகோத்தமன், இணை சார் பதிவாளர் ஜெஸிந்தா ஆகியோரது அறைகளிலிருந்து, 1.93 லட்சம் ரொக்கம் சிக்கியது. ரகோத்தமன், ஜெஸிந்தா, அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், புரோக்கர் ரமேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement