உலக தடகளம்: இந்தியா தடுமாற்றம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நேற்று துவங்கியது. உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.
பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா பங்கேற்றார். 2வது தகுதிச்சுற்றில் இவர், 4 நிமிடம், 13.75 வினாடி நேரத்தில் வந்து 11வது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக 48வது இடம் (மொத்தம் 57) பெற்ற, பைனல் வாய்ப்பை இழந்தார்.
ஆண்களுக்கான 35 கி.மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியாவின் சந்தீப் குமார் (2 மணி நேரம், 39.15 நிமிடம்) 23வது இடம் பிடித்தார். ராம் பாபூ, பாதியில் வெளியேறினார். பெண்களுக்கான 35 கி.மீ., நடை பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா, (3 மணி நேரம், 5:58 நிமிடம்) 24 வது இடம் பெற்றார்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.95 வினாடி), அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் சுவீடனின் டுப்ளான்டிஸ் (5.74 மீ.,) பைனலுக்குள் நுழைந்தார்.