கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

கோவை; கோவையில், கடந்த 2019ம் ஆண்டில், சிங்காநல்லூர், படகு இல்லம் அருகே, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த, திருப்பூர், ராமையா காலனியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement