மலரும் பள்ளி நினைவுகள் பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்

சென்னை;சிந்தாதிரிப்பேட்டை ஆர்.பி.சி.சி., பள்ளி முன்னாள் மாணவ - மாணவியர், 35 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று தங்கள் பள்ளி கால மலரும் நிலைவுகள் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆர்.பி.சி.சி., பள்ளியில் 1990களில் படித்த மாணவ - மாணவியர் 35 ஆண்டுகளுக்குபின், மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், கடந்த சனிக்கிழமை நடந்தது. இச்சந்திப்பின் போது, மாணவ - மாணவியர் அவர்களின் உறவினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் ஆசிரியர்களும் பங்கேற்று நினைவுகளை பகிர்ந்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் களுடன் சேர்ந்து உணவு அருந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ - மாணவியர் பலர், பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, ஆனந்த கண்ணீருடன் மல்க விடைபெற்றனர்.

Advertisement