மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 10 பேருக்கு நிதியுதவி வழங்கல்

கடலுார் : கடலுாரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 10 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 527 மனுக்களை பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 2 லட்சம் ரூபாயும், 9 பயனாளிகளுக்கு தலா 17 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ஈமச் சடங்கு உதவித்தொகையும் என மொத்தம் 10 பேருக்கு 3 லட்சத்து 53 ஆயிரம் நிதி உதவியை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement