விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல; ஒரே வரியில் இபிஎஸ் பதில்

சேலம்: திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி என்று கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, "விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல" என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
தவெக கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று நாகப்பட்டினத்தில் பிரசார கூட்டத்தில் விஜய் பேசுகையில், "2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி" என்று தெரிவித்தார். இது தமிழக அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரே வரி பதில்
அந்த வகையில் இது தொடர்பாக சேலத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ், "அது அவர் கருத்து, ஆனால் மக்கள் கருத்து வேறு" என பதில் அளித்தார்.
சேலம் வந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நேரில், சந்தித்தது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவரே கருத்து சொல்லி இருப்பாரே" என்று இபிஎஸ் கூறிவிட்டு, கையெடுத்து கும்பிட்டபடி புறப்பட்டு சென்றார்.










மேலும்
-
விருதுநகர் பாண்டியன் நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
உலக விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்ற கலசலிங்கம் பல்கலை 13 பேராசிரியர்கள்
-
தொழில் வழிகாட்டி கண்காட்சி
-
பல்வேறு உரங்களின் திரவங்கள் வாங்க நிர்ப்பந்தம்: விவசாயிகள் யூரியா வாங்க.. தயக்கம்
-
கோயில்கள் அருகில் குடிமகன்கள் அட்டகாசம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
-
டில்லியில் பட்டாசு தயாரிக்கலாம் விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை