பிரதமர் 75வது பிறந்த நாள் பா.ஜ., மாநில தலைவர் வாழ்த்து

புதுச்சேரி : பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு, புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது பிறந்தநாள் வாழ்த்து செய்தி;

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்தநாள் விழாவில், அவரின் சிறப்பான தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பு இந்தியாவை வேகமான வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

அவர் பதவி ஏற்ற 2014 ம் ஆண்டு, 10வது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை, உலகின் நான்காவது பொருளாதார நாடாக உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.

தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி ஏற்று, தேர்தல்களில் மக்கள் அவர் மீது வைத்துள்ள உறுதியான நம்பிக்கையை வெற்றி மூலம் நிரூபித்துள்ளார்.

இந்திய மக்களால் மட்டுமல்லாது, உலகத் தலைவர்களாலும் போற்றப்படும் தலைவராக அவர் உயர்ந்துள்ளார்.

இந்தியாவை விஸ்வ குருவாக உருவாக்கும் பணியில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவுடன் நிற்கிறார்கள்.

இந்தியாவை உலகின் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர அவரது முயற்சி மற்றும் நடவடிக்கைகள் வருங்கால தலைமுறைக்கும் முன்மாதிரியாக இருக்கும் மற்றும் 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற குறிக்கோளோடு பயணிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement