ஜி.கே.மணியின் கபட நாடகம் பாலு ஆவேசம்

1

சென்னை : ''கடந்த 25 ஆண்டுகளாக, பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணி கபட நாடகம் ஆடுகிறார்,'' என, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:



தைலாபுரம் தோட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, 'பா.ம.க., தலைமை அலுவலகம், சென்னை, தேனாம்பேட்டை, நாட்டுமுத்து நாயக்கன் தெருவில் தான் உள்ளது.


'வெளியே தெரியாமல், திடீரென மோசடியாக தி.நகர், திலக் தெருவுக்கு மாற்றி விட்டனர். தேனாம்பேட்டை நாட்டுமுத்து நாயக்கன் தெரு தான், இப்போதும் பா.ம.க., அலுவலகம்' என கூறியிருக்கிறார்.




கடந்த 25 ஆண்டுகளாக, பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணி அபாண்டமாக பேசி கபட நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement