ஜொலிக்கும் பூங்கா

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரதவீதி, ஆர்.எஸ்., சாலையில் செயல்படும் ஓ.வி.ஜே. ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் சார்பில் திண்டுக்கல், திருச்சி, பழநி, மதுரை சந்திப்பு சாலையான மூவேந்தர் சாலையின் நடுப்பகுதியில் உள்ள பூங்கா , புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு கண்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட பூங்காவை கலெக்டர் சரவணன் திறந்து வைத்தார். ஓ.வி.ஜே., ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் உரிமையாளர்கள் தினேஷ், தீரஜ் கலந்துகொண்டனர்.

Advertisement