பிரிட்டன் மன்னர் சார்லஸின் பரிசு; கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடி நடும் வீடியோ வைரல்

6

புதுடில்லி: பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மோடி, பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக அளித்த மரக்கன்றை நடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகினது.


பிரதமர் மோடி நேற்று முன்தினம் (செப்.,17) 75வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு, அவருக்கு பிரிட்டன் மன்னர் சார்லஸ் பிறந்த நாள் பரிசாக கடம்ப மரக்கன்று ஒன்றை அனுப்பி வைத்து இருந்தார். இன்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.


இது தொடர்பாக வெளியாகி உள்ள, 40 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.

Advertisement