மாணவர்கள் மறியலால் -பஸ் சேவை நிறுத்தம்

செந்துறை: செந்துறையில் கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் போராடத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று பகுதி மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு செல்ல கூடுதல் பஸ்வசதி கேட்டு மாணவர்கள் ஆக.26ல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தைக்கு பின் நத்தத்தில் இருந்து கோட்டைப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கபட்டது. இந்நிலையில் கோட்டைப்பட்டி வரும் அரசு பஸ் பிள்ளையார்நத்தம் வரை இயக்க வலியுறுத்தி அப்பகுதி மாணவர்கள் செப்., 1ல் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் போராட்டத்திற்கு பின் கோட்டைப்பட்டிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் , துவரங்குறிச்சியில் இருந்து செந்துறைக்கு இயக்கபட்ட அரசு டவுன் பஸ் எந்தவித முன்னறிவிப்பின்றி 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் நடந்தும்,அவ்வழியாக வரும் ஆட்டோக்களில் ஏறி பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. - மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட டவுன்பஸ்களை மீண்டும் இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement