வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்திற்கு 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை

1

சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


அதன் அறிக்கை:
தமிழக தென்மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல், மற்றொரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வங்கக்கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.



இது செப் 27ம் தேதி ஒடிசா-ஆந்திர கடலோரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும். தமிழகத்தின் வடமாவட்டங்களில், சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.


தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 26ம் தேதி தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement