ஸ்வியாடெக் 'சாம்பியன்': கொரிய ஓபன் டென்னிசில் அபாரம்

சியோல்: கொரிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
தென் கொரியாவின் சியோல் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர். முதல் செட்டை 1-6 என இழந்த ஸ்வியாடெக், 'டை பிரேக்கர்' வரை நீடித்த 2வது செட்டை 7-6 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய ஸ்வியாடெக் 7-5 என போராடி தன்வசப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம், 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்வியாடெக் 1-6, 7-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் கைப்பற்றி 25வது சாம்பியன் பட்டம் ஆனது. இதில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டம் அடங்கும்.
இரட்டையர் பிரிவு பைனலில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, சினியாகோவா ஜோடி 6-3, 7-6 என ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட், அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
மேலும்
-
பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு
-
பஸ் மோதி வாலிபர் பலி
-
கொத்தனார் கொலை வழக்கு பண்ருட்டியில் 2 பேர் கைது: மொபைல் உடைத்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
-
நாடகம் ஆடுவது பழனிசாமியின் வேலை தி.மு.க., இளங்கோவன் கிண்டல்
-
ராமநத்தம் பகுதியில் கனமழை 40 வீடுகளில் மழைநீர் புகுந்தது
-
தொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது