சாத்விக்-சிராக் 2வது இடம்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி 2வது இடம் பிடித்தது.

சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் கிம் வோன் ஹோ, சியோ செயுங் ஜே ஜோடியை சந்தித்தது. முதல் 19-21 என இழந்த இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 15-21 எனக் கோட்டைவிட்டது.

மொத்தம் 45 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி 19-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.
உலக சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஜோடி, நடப்பு சீசனில் தொடர்ந்து 2வது முறையாக பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது. சமீபத்தில் ஹாங்காங் ஓபனில் பைனலில் தோல்வியடைந்தது.

Advertisement