இரும்பு பட்டறை உரிமையாளர் சம்மட்டியால் அடித்து கொலை

வில்லியனுார்; வில்லியனுாரில், இரும்பு பட்டறை உரிமையாளரை சம்மட்டியால் அடித்து கொன்றவரை போலீசார் தேடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த உறுவையாறைச் சேர்ந்தவர் வேதகிரி, 61; கணுவாப்பேட்டையில் இரும்பு பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு இரு மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை, வேதகிரி தலையில் பலத்த காயங்களுடன் இரும்பு பட்டறையில் இறந்து கிடந்தார். அருகில், ரத்த கறை படிந்த சம்மட்டி கிடந்தது. வில்லியனுார் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வேதகிரி பட்டறை நடத்தி வரும் இடத்தை, அவரது மூத்த மகளின் கணவர் ஆறுமுகம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வேதகிரியை ஆறுமுகம் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, ஆறுமுகம் தலைமறைவாகி இருப்பதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அமுதா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: துறவிகள் 7 பேர் பரிதாப பலி
-
ராணுவ அலுவலக தூய்மைப் பணியாளர்களை கவுரவித்தார் ராஜ்நாத்சிங்
-
தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது தங்கம் விலை; இரு தினங்களில் ரூ.1,040 சரிவு
-
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன் ஏற்றுமதி: 5 மாதங்களில் சாதனை
-
ஐ.நா. வருகையின் போது 3 முறை நாசவேலை: கொந்தளித்த டிரம்ப் விசாரணைக்கு உத்தரவு