ராணுவ அலுவலக தூய்மைப் பணியாளர்களை கவுரவித்தார் ராஜ்நாத்சிங்

புதுடில்லி: ராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவுரவித்தார்.

இந்தியாவில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஸ்வச்சதா ஹி சேவா என்ற பிரசாரத்தை கடந்த 17ம் தேதி முதல் அக்.,2ம் தேதி வரை மத்திய அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏபி.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது; தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் இங்கு கூடியுள்ளோம். ஸ்வச்சதா திவாஸ் தினத்தை இன்று நாடே கொண்டாடி வருகிறது. ஒருவர் தனது வீடு மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது, அவர் ஒரு கட்டுப்பாடான மற்றும் பொறுப்பான நபர் என்பதை பிரதிபலிக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement