ஊட்டச்சத்து பெட்டகம் கவர்னர் வழங்கல்

வில்லியனுார் : பிரதம மந்திரி டிபி முக்த் பாரத் தேசிய இயக்கத்தின் கீழ் காச நோயாளிகளுக்கு நிக்ஷய் மித்ரா சார்பில் ஊட்டச்சத்து உணவு பெட்டகங்களை கவர்னர் வழங்கினார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்,- பிரதம மந்திரி டிபி முக்த் பாரத் தேசிய இயக்கத்தின் கீழ் காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு 'நிக்ஷய் மித்ரா' திட்டம் சார்பில்ம் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வில்லியனுாரில் உள்ள ஆயுஷ்மான் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, காசநோயால் பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகங்களை வழங்கி பேசியதாவது:

காச நோயில் இருந்து முற்றிலுமாக விடுபட தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

காச நோய் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்துநிக்ஷய் மித்ரா திட்டத்திற்கு கவர்னர் தனது சொந்த பணத்தை நிதியுதவியாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ஜெயந்த குமார் ரே, இயக்குனர் டாக்டர் செவ்வேல், துணை இயக்குனர்கள் டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் ஆனந்தலட்சுமி மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement