சீன பொருட்களுக்கு சிவப்பு கம்பளம்: கார்கே குற்றச்சாட்டு

பாட்னா: '' பிரதமர் மோடி சுதேசி பற்றி பேசுகிறார். ஆனால், இந்தியாவில் சீன பொருட்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.
பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தலே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், தேர்தல் கமிஷனின் பாரபட்சம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதாரங்கள் வெளியாகி உள்ள நிலையில், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எங்களிடம் தேர்தல் கமிஷன் பிரமாணப் பத்திரம் கேட்கிறது.
பீஹாரை முன்மாதிரியாக கொண்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் ஓட்டுகளை பறிக்க சதி நடக்கிறது. ரேசன், பென்சன், மருந்து, குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் ஆகியன திருடப்படுவதையும் ஓட்டுத்திருட்டு குறிக்கிறது.
வாக்காளர் உரிமை யாத்திரை, பீஹார் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வெளிப்படையாக வந்து ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
மஹாத்மா காந்தியின் தாரக மந்திரம் சுதேசி. ஆங்கிலேயர்களை தோற்கடிக்க காங்கிரஸ் பயன்படுத்தியது. தற்போது சுதேசி என்பதை பிரதமர் மோடி நினைவுபடுத்துகிறார். அதே நேரத்தில் சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளை நமது நாடு சந்தித்து வருகிறது. பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, தன்னாட்சி அமைப்புகளை பலவீனப்படுத்துதல் ஆகியன நிகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.











மேலும்
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: துறவிகள் 7 பேர் பரிதாப பலி
-
ராணுவ அலுவலக தூய்மைப் பணியாளர்களை கவுரவித்தார் ராஜ்நாத்சிங்
-
தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது தங்கம் விலை; இரு தினங்களில் ரூ.1,040 சரிவு
-
அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
-
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன் ஏற்றுமதி: 5 மாதங்களில் சாதனை
-
ஐ.நா. வருகையின் போது 3 முறை நாசவேலை: கொந்தளித்த டிரம்ப் விசாரணைக்கு உத்தரவு