சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது: நயினார் நாகேந்திரன்

சென்னை: சமூக நீதி குறித்து திமுக அரசு வாய் திறக்கவே கூடாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு;
திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா?தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சமூக நீதி குறித்து சந்து பொந்துகளில் எல்லாம் வகுப்பெடுக்கும் அறிவாலய அரசுக்குத் தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பணமில்லையா? அல்லது மனமில்லையா?
ஒருபுறம் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி நல்வாழ்வுக்கு வித்திடும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நமஸ்தே திட்டத்தை செயல்படுத்திவருகிறது, மறுபுறம் முதல்வர் ஸ்டாலின் அரசோ, போதிய உபகரணங்கள் வழங்காது தூய்மைப் பணியாளர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இது தான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம்.
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறித்துவிட்டு, சில லட்சம் ரூபாயை மட்டும் இழப்பீடாகக் கொடுத்து, செய்த தவறை சரி செய்யாது அடுத்த தேர்தலுக்கான விளம்பரத்திற்கு ஆயத்தமாகிவிடும் திமுக அரசு, இனி ஒருநாளும் சமூகநீதி குறித்து வாய்திறக்கவே கூடாது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (9)
Mahendran Puru - Madurai,இந்தியா
23 செப்,2025 - 18:40 Report Abuse

0
0
Nagarajan S - Chennai,இந்தியா
23 செப்,2025 - 20:02Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
23 செப்,2025 - 18:01 Report Abuse

0
0
Vasan - ,இந்தியா
24 செப்,2025 - 01:59Report Abuse

0
0
Reply
Sivakumar - Salem,இந்தியா
23 செப்,2025 - 15:42 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
23 செப்,2025 - 16:12Report Abuse

0
0
Sivakumar - Salem,இந்தியா
23 செப்,2025 - 18:52Report Abuse

0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
23 செப்,2025 - 15:09 Report Abuse

0
0
Reply
pakalavan - ,இந்தியா
23 செப்,2025 - 15:06 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உலக பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியை ஒப்புக்கொண்டனர்; அமித்ஷா பெருமிதம்
-
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிப்பு: பின்னணி என்ன
-
செந்தில்பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது: காங்கிரஸ் கொந்தளிப்பு
-
ஐஎன்எஸ் தலைவராக விவேக் குப்தா தேர்வு
-
வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைகள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!
-
சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!
Advertisement
Advertisement