பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்தணும்: சோனியா வலியுறுத்தல்

3

புதுடில்லி: பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு சோனியா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். இது இப்போது நீதி, அடையாளம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுக்கான போராக உள்ளது. பாலஸ்தீன பிரச்னையில் பாஜ அரசின் ஆழ்ந்த மவுனம் என்பது மனிதநேயத்தையே கைவிடும் செயலாகும்.

இதுபோன்ற ராஜதந்திர பாணி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு உகந்தது அல்ல. பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையிலான தனிப்பட்ட நட்பைக் கருத்தில்கொண்டு அரசு செயல்படுகிறது. பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் பட்டியலில் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.



நீண்ட காலமாகப் பொறுமை காக்கும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முதல் படி. காசா மக்கள் பஞ்சம் போன்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் மிகவும் தேவையான உணவு, மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்குவதை கொடூரமாகத் தடுத்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உதவி மையங்களில் உணவைப் பெற முயற்சிக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.

Advertisement