காட்டுயானை தாக்கிஒருவர் படுகாயம்
வடவள்ளி:பொம்மணம்பாளையம், சின்னமலையையொட்டியுள்ள தோட்டத்தில், ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில், ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, பொம்மணம்பாளையம், சின்னமலையையொட்டி உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தில், 55 என்பவர், கடந்த, 10 ஆண்டுகளாக, தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், செந்தில், நேற்று இரவு, மனைவியுடன் கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, தோட்டத்திற்குள் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, செந்திலை தாக்கியது. இதில், காட்டு யானை தாக்கியதில் செந்திலின் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. செந்திலின் கூச்சல் சத்தம் கேட்டு வந்தவர்கள், அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில், செந்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும்
-
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை
-
நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உள்துறை அமைச்சகம்!
-
10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்
-
அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை
-
கரூர் சம்பவம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள்; பிரேமலதா உருக்கம்
-
கரூர் கலெக்டர், எஸ்பி இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: அண்ணாமலை