விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

13

சென்னை: நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளதை அடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.


வெடிகுண்டு மிரட்டல்


இமெயிலில், விஜய் வீடு, நுங்கம்பாக்கம் இலங்கை துாதரகம், ஆயிரம் விளக்கில் உள்ள பிரிட்டன் துாதரக அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை மாணவர் அமைப்பினர் விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இத்தகைய சூழ்நிலையில் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது அவரது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement