சென்னையில் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் தாமதம்; பயணிகள் 4 மணி நேரம் காத்திருப்பு

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 7.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படுவதாக இருந்தது. இதற்காக, காலை 6 மணிக்கு பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அந்தமான் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், 158 பயணிகளும் விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மணிக்குப் பிறகே விமானப் புறப்பட்டு செல்லும் என்று கூறினர். இதனால் ஏர் இந்தியா விமான அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிற விமானங்கள் எந்தவித தடையின்றி அந்தமானுக்கு சென்றடைந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் வானிலை தடையாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், இது பெரிய ரக விமானம் என்பதால் வானிலை சரியாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினர்.
மேலும்
-
விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை
-
நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை நிராகரித்தது உள்துறை அமைச்சகம்!
-
10வது ஆயுர்வேத தினம்: நியூயார்க்கில் கொண்டாட்டம்
-
அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை
-
கரூர் சம்பவம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள்; பிரேமலதா உருக்கம்
-
கரூர் கலெக்டர், எஸ்பி இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: அண்ணாமலை