தீ பற்றி எரிந்த டிப்பர் லாரி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கட்டட கழிவுகளை ஏற்றிக்கொண்டு காலை 8:30 மணிக்கு டிப்பர் லாரி மதுரை--- தூத்துக்குடி நான்கு வழி சாலையில் வணிக துறை அலுவலக கட்டடத்திற்கு சென்று கொண்டிருந்தது.

டிரைவர் பெருமாள், 41, ஓட்டி சென்றார். பாலையம்பட்டி நான்கு வழிச்சாலை அருகே வந்த போது லாரியின் கேபின் பகுதியில் புகை கிளம்பி தீ பற்றியது. லாரியை உடனடியாக நிறுத்திய டிரைவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து தீயை அணைத்தனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. எந்த வித உயிர் சேதமும் இல்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement